Breaking News

மனதை உ ரு க வை க் கும் சம்பவம் !!இ ற ந் து போ ன தெருநாய்க்கு க ண் ணீ ர் அ ஞ் ச லி பிளக்ஸ் வைத்த தெருவாசிகள்…

மிகவும் நன்றியுள்ளவை நாய்கள். தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் இருக்க முடியாது. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றாலும் உடனே தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நாய்கள் ஓடிவந்துவிடும். அதனால் தான் பெரும்பாலான வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள்.

அதிலும் வீட்டில் வளர்க்கும் நாயைப் பார்த்தால் தெருநாய்கள் குரைப்பதும், ஒரு தெருவில் இருந்து அடுத்தத் தெருவுக்கு புதுவரவாக எதுவும் நாய் வந்துவிட்டால் அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து நாய்கள் சேர்ந்து குரைத்தே விரட்டுவதையும் பார்த்திருப்போம். அதனால் தான் யாரேனும் ஒருவரை திட்டினால் கூட ‘சூரியனைப் பார்த்து நாய் குழைப்பதைப் போல’ என பகடியாகச் சொல்கிறோம்.

நாய்களை காவல்துறையிலும் கூட பயன்படுத்துகிறார்கள். துப்பறியும் விசயத்தில் நாய்கள் மிக முக்கியபங்கு வகிக்கின்றன. பல பகுதிகளிலும் தெருநாய்கள் அந்தப் பகுதிவாசிகள் கொடுக்கும் உணவை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு சம்பளம் வாங்காத காவல்காரர்களாக நிற்கின்றன. அந்தவகையில் ராசிபுரம் நகரில், பட்டணம் ரோடு சக்தி விநாயகர் கோயில் தெருவில் நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதி மக்கள் அந்த நாய்க்கு விக்கி எனப் பெயர் வைத்தனர்.விக்கி கடந்த 8 வருசமாக அப்பகுதி மக்களின் நேசத்துக்குரியவனாக சுற்றிவந்தது. மக்களுக்கு அது காவல் காக்க, அவர்களும் விக்கிக்கு உணவூட்டி வளர்த்து வந்தனர்.

தெருவாசிகளைத் தவிர வேறு யாரையும் விக்கி தெருவுக்குள் அனுமதித்தது இல்லை. இதனால் திருட்டு பயம் இன்றி அந்த மக்கள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் உடல்நலமில்லாமல் விக்கி நாய் உயிர் இழந்தது. இதனால் சோகத்தின் விளிம்புக்குப் போன அப்பகுதிமக்கள் நாய் விக்கிக்கு, பிளக்ஸ் போர்ட் வைத்து கண்ணீர் அஞ்சலி தெரிவித்துள்ளனர். இது மனதை உருகவைக்கும்படி அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *