எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. உண்மையில் அப்படி இருக்க முடியாது என்றாலும் வயதாகும் அறிகுறிகளை ஓரளவு நம்மால் கட்டுக்குள் கொண்டு வர இயலும். 50 வயதிலும் கூட 20 போல காட்சி அளிக்க ஒரு எளிய ஃபேஸ் பேக்கை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இதற்காக அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்குமோ என்று எண்ணி பயப்படாதீங்க. குறைவான செலவில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தான் இந்த ஃபேஸ் பேக்கை நாம் செய்யப்போகிறோம்.

இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு நமக்கு கிரீன் டீ தூள், முல்தானி மெட்டி, தேன், தயிர் ஆகிய நான்கு பொருட்கள் மட்டும் போதும். ஒரு சிறிய பவுலில் இந்த நான்கு பொருட்களிலுமே தலா ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் போல கலந்து கொண்டு இதனை முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர வைக்கவும்.
ஃபேஸ் பேக் உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொள்ளலாம். அனைத்து வித சருமம் கொண்டவர்களுக்கும் இந்த ஃபேஸ் பேக் பொருந்தும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் போட்டாலே போதும். முகச்சுருக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் உங்களை நெருங்காது. என்றும் இளமையாகவே இருக்கலாம்.

ஒரு வேலை மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை வாங்குவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால் வெறும் கடலை மாவுடன் தயிரை கலந்து கூட ஃபேஸ் பேக்காக பயன்படுத்தி கொள்ளலாம். இதனை முகத்தில் தடவிய பிறகு உங்கள் முகத்தை ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளுங்கள். உங்கள் இளமை தோற்றத்திற்கு இந்த ஃபேஸ் பேக்குகளை மட்டுமே நம்பி இருக்க கூடாது.
உங்கள் உடல் ஆரோக்கியம் மீதும் நீங்கள் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள்.

மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு உங்கள் மன ஆரோக்கியமும் முக்கியமானது. அழகிற்காக இத்தனை பாடுபட வேண்டுமா என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். அழகு என்பது பிறர் பார்ப்பதற்கு மட்டும் அல்லாமல் நமக்கு ஒரு தன்னம்பிக்கையூட்டியாகவும் இருக்கும்.