காதல் என்ற திரைப்படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு அறிமுகமான சந்தியா தமிழ்சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

காதல், டிஷ்யூம், வல்லவன், தூண்டில், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் மற்றும் இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் நடித்த படம் சூதாட்டம்.

இவர் 2015ஆம் ஆண்டு சந்திரசேகரன் என்பவரை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார், பின்பு ஒரு வருடத்தில் குழந்தையும் பிறந்தது. சில வருடங்களாக போஸ்ட்பார்டம் ப்ளூஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு உள்ளானார் சந்தியா.

இப்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவந்த சந்தியா அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தனது மகனுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார். இதுவரை இப்படி ஒரு போஸ் கொடுத்ததே இல்லையே என ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
